Monday, August 24, 2009

அது ஒரு அப்பாவி Jeevan

அன்று சனி கிழமை..மங்களமான நாள்.அன்றும் வழக்கம் போல சூரியன் கிழக்கில்தான் உதித்தது என்று சொல்கிறார்கள்..சொல்லட்டும்..நான் கண்ணால் பார்க்கும் வரை நம்ப போவதில்லை. இதுக்காக sun rise, 8- மணிக்கு மேல start ஆகர மாதிரி ஒரு இடத்துக்கு tour போகனும்ங்கறது என்னோட one of the future plans -ல ஒண்ணு.

காலைல எழுந்தப்பரும், முதல் வேலையா, முக்கி முக்கி கடன் செலுத்தினேன். அப்பரும் பல் தேச்சு, குளிச்சு, சாப்ட்டு முடிக்கும்போது டைம் 1 p.m. கிண்டி-க்கு வந்தா pick up பண்ணிக்கறதா சொன்னாரு infy நண்பர் லக்ஷ்மி நாராயணன். கிண்டி ஸ்டேஷன் - petrol பங்க்-1.40 p.m.- tavera no:4114.

சக employee-ஆன வித்யா-வும் அங்கேதான் காருக்காக waiting. கொஞ்ச நேரத்துல tavera-வும் வந்தது. காரின் கதவை திறந்தவுடன் கேட்க தோணின முதல் கேள்வி- 'ஐ! மச்சி! A/C-யா?' என்பதாக இருந்தாலும், 'ஹாய் லக்ஷ்மி! எப்டி இருக்கன்னு' கேட்டு decency maintain பண்ணினேன். உள்ள எனக்கு பழக்கமில்லாத ஒரு office friend-உம் இருந்தாங்க என்பது குறிப்பிடத்தக்கது.
"விஜய்..பின் சீட்-ல உக்கந்துக்கிட்டா அடுத்து வரவங்களுக்கு easy-யா இருக்கும்" என்றான் லக்ஷ்மி. 'no problem-டா'-ன்னு சொல்லிட்டு கதவ திறக்க முயற்சி பண்ணறேன், முடியல. 'என்னங்க driver இது திறக்கவே முடியல?'. Driver நல்லா உத்து பாத்து .. 'ம்ம்ம்..சார்.. அந்த lock-a எடுத்து விடுங்க சார்'
'ஆ! இதுவா?? ம்ம்.. இப்பிடியா?..ம்ம்..இப்ப திறக்குது'
நம்ம என்னதான் பாத்து பாத்து decency maintain பண்ணினாலும் சில நேரம் நம்ம non-sency வெளில வந்துதான் தீரும். எல்லாரும் எங்க office colleague Jeevan கல்யாணத்துக்குதான் கேளம்பிட்டிருந்தோம்.

மொத்தமா car-ல travel பண்ணினது 8 பேர்... நான், லக்ஷ்மி நாராயணன், சாய்,ரேனு சக்கரவர்த்தி, நாக லதா,சுகந்தி, மணி மொழி, driver. கல்யாணம் திருவண்ணாமலை-ல.அதனால travel-க்கு நிச்சயம் 4 மணி நேரமாவது ஆகும். இந்த travel-க்கு நடுவுல ஒவ்வொருதங்களுக்கும் ஒவ்வொரு பயம், வேண்டுதல், ஆசைகள். எனக்கும் இருந்துச்சு..

1. 'வண்டி எந்த விதமான accident-லையும் மாட்டிக்க கூடாது. அப்படி மாட்டினா, atleast நானாவது தப்பிச்சிரனும்.'

எங்க driver வண்டி ஒட்டின விதத்த பாத்தீங்கனா, திருபதிக்கில்ல..Mt.Everest-க்கே மொட்ட போடறதா வேண்டிபீங்க.

2. 'Swine flu வராம பாத்துக்கணும்.'

3. 'தீவிரவாத கும்பல் எதுவும் கடத்த வராம இருக்கணும்'

4. Reception colourful-ல்லா இருக்கணும்.

(தொடரும்...)

2 comments: