ம: மகேஷ் சார்..கே.மகேஷ்..
வி.பு : இப்ப நீங்க மகேஷ்ணு பேரு வெச்சுருக்கர்தால எல்லாரும் உங்கள மகேஷ்வரி மகேஷ்வரின்னு கிண்டல் பண்ணுவாங்க..இல்லையா??
ம: ஹ்ம்ம்..இது வரைக்கும் யாரும் அப்டி கிண்டல் பண்ணல சார்..
வி.பு: இப்ப பண்ணலனாலும் அப்பரும் பண்ணுவாங்க..அதனால நீங்க என்ன பண்றீங்க..மொதல்ல உங்க பேர மாத்திக்கோங்க..ஹ்ம்ம்...'பாரத்
ம: 'பாரத்' -தா? 'பரத்' - னு கேள்வி பட்டிருக்கேன்.. அது என்ன 'பாரத்'?
வி.பு : அது வந்து தங்கச்சி..
(மகேஷ் முறைத்தான் )
வி.பு : சரி சரி.. தம்பி தம்பி..நீங்க இப்ப 'பாரத்' - னு பேரு வெச்சீங்கனா..நாளைக்கு உங்கள யாரவது கிண்டல் பண்ணி, 'பாரதி' அப்டின்னு கூப்டுவாங்க..'பாரதி' பாருங்க, ஒரு ஆம்பளை பேரு.. so கிண்டல் அடிச்சவங்க கிட்ட நீங்க "சொல்லிக்கோ சொல்லிக்கோ..பரவால்லையே..." அப்டின்னு தைரியமா பதிலிக்கு சாலேஞ்சு பண்ணலாம்.
but 'பரத்' -னு பேரு வெச்சிகிட்டா, 'பரதி' - னு சொல்லி கிண்டல் பண்ணுவாங்க. 'பரதி'- நா பாருங்க, அர்த்தமே இல்லாத பேரா இருக்கு.. பேருக்கு அர்த்தமில்லனா, வாழ்க்கைக்கே அர்த்தமில்லாம போய்டும்..உங்க வாழ்க்கையே ஒரு கேள்வி குறி ஆயிடும்..
ம: அப்டினா.. கேள்வி குறிக்கு எந்த அர்த்தமும் இல்லன்னு சொல்ல வரீங்களா?
வி.பு : அது இல்ல.. இப்ப நீங்க ஒரு class room- ல உக்காந்திருக்கீங்க வெச்சுக்கோங்க.. அப்ப maths teacher வந்து.. 'LIFE = ? ' அப்டின்னு எழுதிபோட்ட எப்டி இருக்கும்?
ம: ஒண்ணுமே புரியாம இருக்கும்..
வி.பு : அதான்..ஏன் ஒண்ணுமே புரியல? ஏன்னா அதுக்கு என்ன அர்த்தம்னே உங்களுக்கு தெரியல.. உங்க வாழ்க்கை(LIFE) அர்த்தம் இல்லாம போயிடுது!
so Life ஒரு question mark -கா போயிட்டா உங்க வாழ்க்கை அர்த்தம் இல்லாம போயிடும்..and vice versa.
ம: ஓ!... சரி
வி.பு : அப்ப.. நீங்க உங்க பேர 'பாரத்' - னு மாத்திக்கலாம்.
ம: ஆனா சார்! 'பாரத்' - ங்கற பேருக்கு என் முகம் செட்டே ஆகாது சார்.
வி.பு: no no no no.. இது உங்களுக்கு numerology படி perfect -ஆ செட் ஆகர பேரு. இத புறக்கணிச்சா ஒரு மனுஷனுக்கு இருக்கற பத்து குணம்-ல உங்களுக்கு ஒண்ணு பறந்து 'ஒம்போது' ஆயிடும்..
ம: சரி சரி ..மாத்திக்கறேன்..
வி.பு : இப்பவே மாத்திக்கணும்..
ம: இன்னாது?? இப்பவேவா?
வி.பு : ஆமாம்..இல்லேனா பலன் கிடைக்காது.
ம: சரி மாத்திக்கிட்டேன்..அப்பரும்?
வி.பு : ஹும்ம் ஹும்ம்.. வெறுமன வாயால சொன்னா போதாது.. மனசார உணர்ந்து மாத்திக்கணும்..
(கடுப்புடன் மகேஷ் சிறிது நேரம் கண்ணைமூடி ஏதோ யோசித்தான்)
பாரத்: ஹ்ம்ம்..மாத்திக்கிட்டேன் சார்..
வி.பு : :-)
சரி..உங்களுக்கு 9th Tables தெரியுமா?
(தொடரும்)