Thursday, August 13, 2009

உஸ்ஸ்ஸ்...இது ஒரு டிவி ப்ரோக்ராம் அல்ல..





மக்களே..நேத்து நான் ஒரு tv் ப்ரோக்ராம் பாத்தேன்....நுமராலாஜி , என் கணிதம் ,் பரிகாரம்னு ஒர்த்தன் ப்ரோக்ராம் நடத்திட்டு இருந்தான். இவனுக்கு இந்த பக்கம் ஒரு ஆள் நெளிஞ்சு நெளிஞ்சு ் கவலையோட உக்காந்துட்டு இருந்தான். அவங்க ரெண்டு பேரும் பரிமாரிகிட்ட பேச்ச, கொஞ்சம் exaggarate ் பண்ணி போட்டுருக்கேன். படிச்சு பாருங்க..முடிஞ்சா சிரிச்சும் பாருங்க!

இந்த நிகழ்ச்சீல 3 -வதா ஒரு அட்டு compirer் வேற
.
compirer் : வணக்கம், மறுபடியும் உங்கள நம்மளோட நுமராலஜி நிகழ்ச்சியான 'poojya பூஜ்யம்'-கு வரவேற்கிறோம். நம்மோடு உரையாட இங்கே வந்திரிக்கிறார், திரு இர.ஜெ.ஜெ.விக்கிரம புருஷர்..வணக்கம் சார்..

இர.ஜெ.ஜெ.விக்கிரம புருஷர் : வணக்கம்மா..மீண்டும் இந்த நிகழ்ச்சியில் உங்கள அனைவரையும் வரவேற்கிறோம்.(எதிரில் உட்காந்திருப்பவரை பார்த்து) சொல்லுங்க அய்யா, உங்க பிரச்சனை என்ன?

மகேஷ் : வணக்கம் அய்யா, என் பேரு மகேஷ்..

வி.பு : மகேஷ்! நல்ல பேருதானே..அதுல என்ன உங்களுக்கு பிரச்சனை?

ம: இல்ல சார்..எனக்கு சொல்லவே ரொம்ப வெக்கமா இருக்கு சார் ..

வி.பு: அட! சும்மா சொல்லுங்க சார், இதுல என்ன வெக்கம்? மகேஷ்! மகேஷ்!..இதுல வெக்க பட என்ன இருக்கு..ஒரு வேள மகேஷ்னா சென்னை தமிழ்ல ஏதாவது கேட்ட வார்த்தையா?

ம: அது இல்ல சார்..என் ப்ராப்ளம் கொஞ்சம் பர்சனல்..

வி.பு: ஓ..சரி சரி.. வேணும்னா இந்த பொண்ண காத போத்திக்க சொல்றேன்.. நீங்க தைரியமா, சத்தமா சொல்லுங்க

ம: வேணாம் சார்! வேணும்னா அவங்க கேக்கட்டும்..நீங்க காத போத்திக்கொங்க...........

(கண்ணாடி சரி ி செய்து கொண்டே அசடு வழிய giggle-கினார் வி.பு)

ம: ஆமாம் சார் எனக்கு அந்த மாதிரி பிரச்சன..நான் ஏன் ஆம்பளையா பொறந்தேன்னு தோணுது.. நடு வகுடு எடுத்து வாரனும்னு ஆசையா இருக்கு..இந்த பொண்ணு வம்புக்கு இழுக்கலாம் பொஅல இருக்கு..

(நான் கடிகாரத்தை பார்த்த போது மணி 9 அடிக்க இன்னும் 40 நிமிடங்கள் பாக்கி இருந்தது..)


வி.பு : ஓ..கடைக்கு போனா, கடைகாரர் கிட்டிருந்து காசு வாங்கிகிட்டு வரணும் போல இருக்கா?

ம: ஆமாம்..

வி.பு: எங்க உங்க ரெண்டு கையையும் சேது தட்டி காமிங்க..

(மகேஷ் கை விரல்கள் அனைத்தையும் விரித்து, உள்ளங்கை ஒன்றோடு ஒன்று பலமாக பதிகிறார் போல 'த்தட்் த்தட்' என்று தட்டி கையை விரித்தார். Compirer, தன் முகத்தில் தோன்றிய வியர்வையை கை குட்டையால் துடைத்து கொண்டாள் ். வி.பு-விற்கு எதனாலோ அவர் சென்ற மாதம் ரயிலில் பிரயாணம் செய்தது நினைவிற்கு வந்தது .)

வி.பு:ஹ்ம்ம்..கேசு கொஞ்சம்...சாரி ்..விஷயம் கொஞ்சம் advanced stage -ல தான் இருக்கு. இருந்தாலும் நான் சொல்ற மாதிரி பரிகாரம்லாம் செஞ்சிட்டா, எல்லாம் சரி ஆய்டும்.

ம: நீங்க நல்லா இருக்கணும்..என்னனு சொல்லுங்க சார்

(தொடரும் ...)



பி.கு : spelling mistekas இருந்தால் பொருத்துக்கொள்ளவும்.

1 comment:

  1. andha TR padathoda paattai include pannirundheenganna, nalla irundhirukkum

    ReplyDelete