Monday, August 17, 2009

உஸ்ஸ்ஸ்...இது ஒரு டிவி ப்ரோக்ராம் அல்ல.. - 2

வி.பு : ஹ்ம்ம்.. உங்க பேரு என்ன சொன்னீங்க?

ம: மகேஷ் சார்..கே.மகேஷ்..

வி.பு : இப்ப நீங்க மகேஷ்ணு பேரு வெச்சுருக்கர்தால எல்லாரும் உங்கள மகேஷ்வரி மகேஷ்வரின்னு கிண்டல் பண்ணுவாங்க..இல்லையா??

: ஹ்ம்ம்..இது வரைக்கும் யாரும் அப்டி கிண்டல் பண்ணல சார்..

வி.பு: இப்ப பண்ணலனாலும் அப்பரும் பண்ணுவாங்க..அதனால நீங்க என்ன பண்றீங்க..மொதல்ல உங்க பேர மாத்திக்கோங்க..ஹ்ம்ம்...'பாரத்' -னு இனிமே பேரு வெச்சுக்கோங்க..

: 'பாரத்' -தா? 'பரத்' - னு கேள்வி பட்டிருக்கேன்.. அது என்ன 'பாரத்'?

வி.பு : அது வந்து தங்கச்சி..

(மகேஷ் முறைத்தான் )

வி.பு : சரி சரி.. தம்பி தம்பி..நீங்க இப்ப 'பாரத்' - னு பேரு வெச்சீங்கனா..நாளைக்கு உங்கள யாரவது கிண்டல் பண்ணி, 'பாரதி' அப்டின்னு கூப்டுவாங்க..'பாரதி' பாருங்க, ஒரு ஆம்பளை பேரு.. so கிண்டல் அடிச்சவங்க கிட்ட நீங்க "சொல்லிக்கோ சொல்லிக்கோ..பரவால்லையே..." அப்டின்னு தைரியமா பதிலிக்கு சாலேஞ்சு பண்ணலாம்.
but 'பரத்' -னு பேரு வெச்சிகிட்டா, 'பரதி' - னு சொல்லி கிண்டல் பண்ணுவாங்க. 'பரதி'- நா பாருங்க, அர்த்தமே இல்லாத பேரா இருக்கு.. பேருக்கு அர்த்தமில்லனா, வாழ்க்கைக்கே அர்த்தமில்லாம போய்டும்..உங்க வாழ்க்கையே ஒரு கேள்வி குறி ஆயிடும்..

: அப்டினா.. கேள்வி குறிக்கு எந்த அர்த்தமும் இல்லன்னு சொல்ல வரீங்களா?

வி.பு : அது இல்ல.. இப்ப நீங்க ஒரு class room- ல உக்காந்திருக்கீங்க வெச்சுக்கோங்க.. அப்ப maths teacher வந்து.. 'LIFE = ? ' அப்டின்னு எழுதிபோட்ட எப்டி இருக்கும்?

: ஒண்ணுமே புரியாம இருக்கும்..

வி.பு : அதான்..ஏன் ஒண்ணுமே புரியல? ஏன்னா அதுக்கு என்ன அர்த்தம்னே உங்களுக்கு தெரியல.. உங்க வாழ்க்கை(LIFE) அர்த்தம் இல்லாம போயிடுது!
so Life ஒரு question mark -கா போயிட்டா உங்க வாழ்க்கை அர்த்தம் இல்லாம போயிடும்..and vice versa.

: ஓ!... சரி

வி.பு : அப்ப.. நீங்க உங்க பேர 'பாரத்' - னு மாத்திக்கலாம்.

: ஆனா சார்! 'பாரத்' - ங்கற பேருக்கு என் முகம் செட்டே ஆகாது சார்.

வி.பு: no no no no.. இது உங்களுக்கு numerology படி perfect -ஆ செட் ஆகர பேரு. இத புறக்கணிச்சா ஒரு மனுஷனுக்கு இருக்கற பத்து குணம்-ல உங்களுக்கு ஒண்ணு பறந்து 'ஒம்போது' ஆயிடும்..

: சரி சரி ..மாத்திக்கறேன்..

வி.பு : இப்பவே மாத்திக்கணும்..

: இன்னாது?? இப்பவேவா?

வி.பு : ஆமாம்..இல்லேனா பலன் கிடைக்காது.

: சரி மாத்திக்கிட்டேன்..அப்பரும்?

வி.பு : ஹும்ம் ஹும்ம்.. வெறுமன வாயால சொன்னா போதாது.. மனசார உணர்ந்து மாத்திக்கணும்..

(கடுப்புடன் மகேஷ் சிறிது நேரம் கண்ணைமூடி ஏதோ யோசித்தான்)

பாரத்: ஹ்ம்ம்..மாத்திக்கிட்டேன் சார்..

வி.பு : :-)
சரி..உங்களுக்கு 9th Tables தெரியுமா?

(தொடரும்)

3 comments:

  1. marupadiyum arumaiyaana mokkai...
    //யாரவது கிண்டல் பண்ணி, 'பாரதி' அப்டின்னு கூப்டுவாங்க..............// good one

    ReplyDelete
  2. Nallavaela oru commentaavadhu vandhurukku..illana ella mokkayum naandhan vaangirupaen..

    ReplyDelete
  3. Vijay,
    sadharnama ne moka poduva nu therium ana ipadi okandhu yosichi moka poduvanu inaiku dhan therinjadhu.. Vazhga unadhu mokai.. Valarga unaku varum comments. :-)..
    "so Life ஒரு question mark -கா போயிட்டா உங்க வாழ்க்கை அர்த்தம் இல்லாம போயிடும்..and vice versa" - ucha katta mokai

    - Sathya.S

    ReplyDelete