Monday, April 18, 2016

Samosa chat

ஒரு chat கடையில சமோசா-வும் ஜிலேபி-யும் வாங்கிட்டு வந்து, Marina beach-ல நானும் என் cousin-னும் உக்கார்ந்தோம்.
மொதல்ல சமோசா சாப்பிடலாம்-ன்னு நான் cover'ah பிறிச்சேன்...
நான்: அடடா! மச்சி.. சமோசா-க்கு chutney வைக்க மறந்துட்டான் போல்ருக்கு! so அப்டியே சாப்ட்டிரலாம். சமோசா சூடா இருக்கு.
cousin: ஓ! சரிடா.
சில நேரம் கழித்து... சமோசா சாப்பிட்டு முடித்து, அடுத்து ஜிலேபி சாப்பிட cover'ah மறுபடி open பண்ணினேன்...
நான்: மச்சி! chutney குடுத்திருக்கான்டா!! இதோ இருக்கு பாரு!
cousin : (கொஞ்சம் கடுப்புடன்) மொதல்ல அந்த கடைக்காரனுக்கு phone'ah போடு நீ!
நான்: எதுக்கு டா?
cousin: கொஞ்சம் கூட அறிவு வேணாம்? சமோசா-க்கு chutney கொடுக்காம ஜிலேபி-க்கு கொடுத்திருக்கான்!!

Monday, April 6, 2015

கண்ணே Bebe Rexha!

நீயே ஒரு super சைட்டு!
உனக்கு எதுக்கு ஒரு website?
உன் skin'eh இப்டி மின்னும்போது,
உனக்கு எதுக்கு இப்போ reskin'னு?

www.beberexha.com
உன்னை பார்த்த அடுத்த்த் நொடி..என் வாலிபம்-not-calm
Facebook, Twitter, Instagram
உன் தரிசனம் - I feel lighter by many kilogram

நீயே ஒரு super சைட்டு!
உனக்கு எதுக்கு ஒரு website?
உன் skin'eh இப்டி மின்னும்போது,
உனக்கு எதுக்கு இப்போ reskin'னு?

உன் website'ல ஓடுது Javascript'டு,
நம் கதை, காதல் இலக்கியத்தில் ஒரு சாகா script'டு!
அடிக்கடி change ஆகுது Home page layout,
My heart is the Home for you, Please don't stay out!

நீயே ஒரு super சைட்டு!
உனக்கு எதுக்கு ஒரு website?
உன் skin'eh இப்டி மின்னும்போது,
உனக்கு எதுக்கு இப்போ reskin'னு?

Tuesday, January 20, 2015

ஒரு 'பல்'கலைக்'கலகம்':
பின்னாடி நின்னு கடிச்சு தர, ஒடச்சு தரதுக்கு மட்டும் கடவா பல்லு!
ஆனா முன்னாடி நின்னு இளிக்கறதுக்கு மட்டும் யாரு? படவா rascals!!
எஙகள பாத்தா உங்களுக்கென்ன 'Canine' மாதிரி இருக்கா?!?
நான் இல்லடா..நீங்கலாம் தான் சொத்தை பசங்க!

Monday, October 13, 2014

மனத்திற்க்கு

மனத்திற்க்கு



"சென்றதிநீ மீளாது, மூடரே நீர்

எப்போதும் சென்றதயே சிந்தை செய்து


கொன்றழிகுங் கவலை எனும் குழியில் வீழ்ந்து 

குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா 

இன்று புதிதாய் பிறந்தோம் என்று நீவீர்

எண்மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்;

தீமை எல்லாம் அழிந்துபோம், திரும்பி வாரா."




- பாரதியார்   


Thursday, January 10, 2013

சந்தோஷ படுடா


office விட்டு வந்தா  homework  இல்ல.. சந்தோஷ படுங்கடா டேய் 
நாளிக்கு கிளாஸ் டெஸ்ட் இல்ல, Month end Unit  test  இல்ல,
மார்ச் மாசம் exams இல்ல, நாளிக்கு மல்லிகா மிஸ் காத திருகுவாங்களே-ன்னு பயமில்ல,
சந்தோஷ படுங்கடா 

School'கு லேட்  ஆகிடுசெங்கர பயமில்ல , ID  கார்டு காணுமேனு பயமில்ல,
class work note book'ல அட்ட போடலயேனு கவலை இல்ல 
progress கார்டு'ல sign வாங்கலனா miss அடிபாங்களேனு பயமில்ல 
shoe லேஸ் கயன்டிருசுனா கட்டி விட இப்போ யார் help -உம் தேவை இல்ல .. நீயே போட்டுக்கலாம்.
சினிமா/கிரிக்கெட் மேட்ச்-க்கு நடுவுல அப்பா news channel-க்கு மாதிருவாரேனு கவலை இல்ல..
சினிமா பாக்க sunday வரைக்கும் வெயிட் பண்ண வேண்டிய அவசியமில்ல,
வந்தாலும் படம் நம்ம வீட்டு TV'ல  black & White 'லதானே வரும்னு வருத்தமில்ல
சந்தோஷ படுங்கடா டேய் 

நீ sofware engineer -ரா?
computer games ஆட friend வீட்டுக்குதான் போகணும்னு இல்ல 
வீட்ல நெட் connection இல்லையேனு கவலை இல்ல 
afternoon time-ல வீட்ல current cut ஆனா என்ன ? ஆகலேனா  உனக்கென்ன ?
வெயில்ல அலைஞ்சா கருத்திருவோமேன்னு கவலை இல்ல..

பாத்து பாத்து செலவு பண்ணனும்னு அவசியமில்ல - சும்மா scene போடாதீங்கடா டேய் 
Deluxe bus-ல ஏரினாலும் டிக்கெட் charge பத்தி கவலை இல்ல..
conductor 50 paise return பணலேனா பரவாயில்ல 
சந்தோஷ படுங்கடா  

டெண்டுல்கர் out ஆகிடுவாரோனு (atleast 20-20 & ODI-ல) பயமில்ல 
technology வளந்ததால best friend phone number ஞாபகம் வெச்சுக்கணும்னு அவசியமில்ல 
இனிமே  சந்தோஷ படுங்கடா டேய் 

P.S: இவ்ளோ சந்தோஷமா இருக்கர நீ , சுத்தி இருக்கரவங்களுக்கு எவ்ளோவோ செய்யலாம்! first அவங்களுக்கு இத  share பண்ணலாம்!