Thursday, January 10, 2013

சந்தோஷ படுடா


office விட்டு வந்தா  homework  இல்ல.. சந்தோஷ படுங்கடா டேய் 
நாளிக்கு கிளாஸ் டெஸ்ட் இல்ல, Month end Unit  test  இல்ல,
மார்ச் மாசம் exams இல்ல, நாளிக்கு மல்லிகா மிஸ் காத திருகுவாங்களே-ன்னு பயமில்ல,
சந்தோஷ படுங்கடா 

School'கு லேட்  ஆகிடுசெங்கர பயமில்ல , ID  கார்டு காணுமேனு பயமில்ல,
class work note book'ல அட்ட போடலயேனு கவலை இல்ல 
progress கார்டு'ல sign வாங்கலனா miss அடிபாங்களேனு பயமில்ல 
shoe லேஸ் கயன்டிருசுனா கட்டி விட இப்போ யார் help -உம் தேவை இல்ல .. நீயே போட்டுக்கலாம்.
சினிமா/கிரிக்கெட் மேட்ச்-க்கு நடுவுல அப்பா news channel-க்கு மாதிருவாரேனு கவலை இல்ல..
சினிமா பாக்க sunday வரைக்கும் வெயிட் பண்ண வேண்டிய அவசியமில்ல,
வந்தாலும் படம் நம்ம வீட்டு TV'ல  black & White 'லதானே வரும்னு வருத்தமில்ல
சந்தோஷ படுங்கடா டேய் 

நீ sofware engineer -ரா?
computer games ஆட friend வீட்டுக்குதான் போகணும்னு இல்ல 
வீட்ல நெட் connection இல்லையேனு கவலை இல்ல 
afternoon time-ல வீட்ல current cut ஆனா என்ன ? ஆகலேனா  உனக்கென்ன ?
வெயில்ல அலைஞ்சா கருத்திருவோமேன்னு கவலை இல்ல..

பாத்து பாத்து செலவு பண்ணனும்னு அவசியமில்ல - சும்மா scene போடாதீங்கடா டேய் 
Deluxe bus-ல ஏரினாலும் டிக்கெட் charge பத்தி கவலை இல்ல..
conductor 50 paise return பணலேனா பரவாயில்ல 
சந்தோஷ படுங்கடா  

டெண்டுல்கர் out ஆகிடுவாரோனு (atleast 20-20 & ODI-ல) பயமில்ல 
technology வளந்ததால best friend phone number ஞாபகம் வெச்சுக்கணும்னு அவசியமில்ல 
இனிமே  சந்தோஷ படுங்கடா டேய் 

P.S: இவ்ளோ சந்தோஷமா இருக்கர நீ , சுத்தி இருக்கரவங்களுக்கு எவ்ளோவோ செய்யலாம்! first அவங்களுக்கு இத  share பண்ணலாம்!







1 comment: