Saturday, July 3, 2010

Music..Lightah!

சமீபத்துல ஒரு marriage போயிருந்தேங்க. I mean reception. Reception-னாலே Light Music இருக்கும். நான் இதுவரைக்கும் போன marriages-லலாம் light music பத்தி அவ்ளோ ஆராயிஞ்சதில்ல. ஏன்னா என் கூட அங்க என் சொந்தகாரங்க பசங்களும் வந்திருப்பாங்க ..so மாப்பள பொண்ணோட லட்சணம், சாப்பாடு எதிர் நோக்கி வந்தவங்க mind read பண்றது, நாங்க சும்மா கெடந்தாலும் note பண்ண வெக்கற மாதிரி எதாவுது தடா புடலா செய்றவங்கள பத்தி comment pass பண்றதுன்னு இருப்போம் . But இங்க என் சொந்தக்கார பசங்க ரொம்ப கம்மியாதான் வந்திருந்தாங்க. எல்லாருக்கும் ஏதோ ஆபீஸ் vela..illana மேல் படிப்பு commitments. நம்மள மாதிரி office-க்கும் போயிக்கிட்டு, அப்பரும் reception-உம் attend பண்ணிக்கிட்டு, அதுக்கப்பரும் இப்பிடி ஒரு blog-யும் எழுதிக்கிட்டோ..இல்ல உங்கள மாதிரி படிச்சிகிட்டு இருக்கற வெட்டி சுதந்திரம் நிறைய பேருக்கு கிடையாது. என்ன நான் சொல்றது...?

So Light music start ஆச்சு..இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்..light music troop-ல guitar வாசிப்பது என் சொந்த மாமா அவர்கள். சின்ன வயசில்லிருந்தே எங்க மாமா கிட்ட நான்............. செம்ம அடி வாங்கிருக்கேன்!!! அதோட நிறுத்தாம நான் வீட்ல பண்ற சேட்டைய என் primary school வரைக்கும் வந்து போட்டு குடுத்து, எச்சmiss..i mean H.M மிஸ் வரைக்கும் அடி வாங்க வெச்சிருக்காரு. Head Mistress கிட்ட அடி வாங்கற அளவுக்கு தப்பு பண்றதுன்னா சாதாரண விஷயமா?? - 'பெரும படரேண்டா கண்ணா' (விசு voice inside my head ) . எங்க H.M பத்தி சொல்லனும்னா, அவங்க பக்தியுள்ள christian. Daily school (The Washington English School) prayer அவங்கதான் front-ல நின்னு lead பண்ணுவாங்க. அவங்க 'வலிமையை தாரும்..வலிமையை தாரும்'-னு pray பண்ணும்போதுலாம், students-க்கு கன்னா-முன்னானு வயத்த பெறட்டும். ஏன்னா எல்லாருக்குமே 'இன்னிக்கு நாமதான் H.M miss கிட்ட அடிவாங்க போறோமோ'ன்னு ஒரு பயம்மிருக்கும். இதுல இவங்க வலிமை வேர கேட்டா, வயத்த பேறட்டாதா?

எங்க மாமா ரொம்ப வருஷமாவே guitar வாசிச்சிட்டிருக்கார். super-ஆ வாசிப்பார். Guitar வாசிப்பது ரொம்ப கஷ்டங்க. இப்படி இருக்கும்போது எங்க மாமா troop-ல இருந்தவங்கலாம் சரியான old-fashioned-ஆ இருந்தாங்க. முதல்பாடகர பாத்தபோதே இன்னிக்கு light music-ல M.S.V ராஜியம்தானு தோணிச்சு. But அவங்க அதுக்கும் ஒரு படி மேல போய் பாகவதர் பாட்டுலாம் பாடினாங்க. இதுல எங்க மாமா guitar வெச்சுட்டு என்ன பண்ணுவாருனு எனக்கும் கேள்வி வந்துச்சு. Light Music-a ஒரு வயசான தாத்தா மட்டும் light-ah தலையாட்டி ரசிச்சிகிட்டிருந்தார். 'This part of the program was sponsored by Gemini Hearing Machines' - எல்லாம் நம்ம விளம்பர பசங்கதான்..நீங்க continue பண்ணுங்க .

அது என்னமோ தெரியல நம்ம கண் பார்வைலிருந்து எவன் ஏமாத்த பாத்தாலும் correct-ah மாட்டிட்றான். Triple congo வாசிகரேன்னு ஒண்ணு overact பண்ணிட்டிருந்திச்சு. கணக்கு காமிக்க கூட்டிட்டு வந்த ஆள்னு நல்லா தெரிஞ்சிது. பின்ன?? சில நேரம் A.R.ரஹ்மான் பாட்டுலாம் kara-oke ல போட்டுட்டு சிவனேன்னு மத்த artist-லாம் உக்காந்திட்டு இருக்கும்போது, இவர் மட்டும் தலைய குனிஞ்சு தட்டிகிட்டிருப்பார். Drums-kaaran கட்டைய வெச்சு தட்டும்போதே, ' எங்கடா நம்ம instrument-ஓட sound, speaker-ல சரியா கேக்க மாட்டேங்குதே'-ன்னு feel பண்ரான். இவர் இங்க mike-உம் இல்லாம, ரெண்டு விரலால, இவருக்கு புடிச்ச pattern-ல தட்டிகிட்டிருந்தாறு. இதுல வேர சில நேரம், இவர் ஒரு beat மாத்தி தட்டினது, பாட்டோட ஜீவனையே பாதிச்சிட்டா மாதிரியும், அதை கல்யாணத்துக்கு வந்திரிந்தவங்க எல்லாரும் note பண்ணிட்டா மாதிரியும் feel பண்ணுவாரு.

ஹும்ம்..என்னமோ..

எல்லா பாட்டுமே மொக்கையா இருந்துச்சு. ஒரு வேளை light music troop-க்கு payment delay பண்ணிட்டதாலதான் இப்படியோன்னு doubt கூட வந்திச்சு. But, மண மக்கள் மேடைல ஏறின உடனே 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை'-னு பாட்டு பாடும்போதுதான், payment-eh தரலைன்னு confirm ஆச்சு.அதுக்கு இப்படியா மாப்ளையே வெறுப்பேத்துவாங்க?
So, Light music மக்களே..கஷ்ட பட்டு சம்பாதிக்கலாம்..but அது மத்தவங்க(audience) கஷ்டப்பட்டு கெடயாது. திருமண வீட்டாரே, நீங்களும் Light Music-குக்கோ, Caterers-கோ payment பாக்கி வெச்சுராதீங்க. இல்லனா வீட்டு தாய்மார்கள், அடம் புடிக்கற பசங்கள்ட "அழுகைய நிறுத்திட்டு school-கு போறியா? இல்ல evening எதாவது reception கூட்டிட்டு போகட்டுமான்னு " மெரட்டற காலம் வந்திடும்.

3 comments:

  1. Vijay, nee puthusa vaangirukka guitarla seekrama kathuko... Onnoda kurikol (Goal) namma thala Jeevan recorda break panradha thaan irukanum.. Avar 'Twinkle twinkle' patta oru varushathulayae kathukittaaru.. :)

    ReplyDelete
  2. Kandippa! But adhula oru chinna correction. Naan guitar'ah pudhusa vaangala, pazhasaadhan vaanginaen. :-D

    ReplyDelete
  3. As a matter of fact, enaku twinkle twinkle innum vaasika theriyadhu :(
    So vijay, I am making your goal easy :)

    ReplyDelete