Tuesday, January 20, 2015

ஒரு 'பல்'கலைக்'கலகம்':
பின்னாடி நின்னு கடிச்சு தர, ஒடச்சு தரதுக்கு மட்டும் கடவா பல்லு!
ஆனா முன்னாடி நின்னு இளிக்கறதுக்கு மட்டும் யாரு? படவா rascals!!
எஙகள பாத்தா உங்களுக்கென்ன 'Canine' மாதிரி இருக்கா?!?
நான் இல்லடா..நீங்கலாம் தான் சொத்தை பசங்க!

Monday, October 13, 2014

மனத்திற்க்கு

மனத்திற்க்கு



"சென்றதிநீ மீளாது, மூடரே நீர்

எப்போதும் சென்றதயே சிந்தை செய்து


கொன்றழிகுங் கவலை எனும் குழியில் வீழ்ந்து 

குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா 

இன்று புதிதாய் பிறந்தோம் என்று நீவீர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்;

தீமை எல்லாம் அழிந்துபோம், திரும்பி வாரா."




- பாரதியார்   


Thursday, January 10, 2013

சந்தோஷ படுடா


office விட்டு வந்தா  homework  இல்ல.. சந்தோஷ படுங்கடா டேய் 
நாளிக்கு கிளாஸ் டெஸ்ட் இல்ல, Month end Unit  test  இல்ல,
மார்ச் மாசம் exams இல்ல, நாளிக்கு மல்லிகா மிஸ் காத திருகுவாங்களே-ன்னு பயமில்ல,
சந்தோஷ படுங்கடா 

School'கு லேட்  ஆகிடுசெங்கர பயமில்ல , ID  கார்டு காணுமேனு பயமில்ல,
class work note book'ல அட்ட போடலயேனு கவலை இல்ல 
progress கார்டு'ல sign வாங்கலனா miss அடிபாங்களேனு பயமில்ல 
shoe லேஸ் கயன்டிருசுனா கட்டி விட இப்போ யார் help -உம் தேவை இல்ல .. நீயே போட்டுக்கலாம்.
சினிமா/கிரிக்கெட் மேட்ச்-க்கு நடுவுல அப்பா news channel-க்கு மாதிருவாரேனு கவலை இல்ல..
சினிமா பாக்க sunday வரைக்கும் வெயிட் பண்ண வேண்டிய அவசியமில்ல,
வந்தாலும் படம் நம்ம வீட்டு TV'ல  black & White 'லதானே வரும்னு வருத்தமில்ல
சந்தோஷ படுங்கடா டேய் 

நீ sofware engineer -ரா?
computer games ஆட friend வீட்டுக்குதான் போகணும்னு இல்ல 
வீட்ல நெட் connection இல்லையேனு கவலை இல்ல 
afternoon time-ல வீட்ல current cut ஆனா என்ன ? ஆகலேனா  உனக்கென்ன ?
வெயில்ல அலைஞ்சா கருத்திருவோமேன்னு கவலை இல்ல..

பாத்து பாத்து செலவு பண்ணனும்னு அவசியமில்ல - சும்மா scene போடாதீங்கடா டேய் 
Deluxe bus-ல ஏரினாலும் டிக்கெட் charge பத்தி கவலை இல்ல..
conductor 50 paise return பணலேனா பரவாயில்ல 
சந்தோஷ படுங்கடா  

டெண்டுல்கர் out ஆகிடுவாரோனு (atleast 20-20 & ODI-ல) பயமில்ல 
technology வளந்ததால best friend phone number ஞாபகம் வெச்சுக்கணும்னு அவசியமில்ல 
இனிமே  சந்தோஷ படுங்கடா டேய் 

P.S: இவ்ளோ சந்தோஷமா இருக்கர நீ , சுத்தி இருக்கரவங்களுக்கு எவ்ளோவோ செய்யலாம்! first அவங்களுக்கு இத  share பண்ணலாம்!







Saturday, July 3, 2010

Music..Lightah!

சமீபத்துல ஒரு marriage போயிருந்தேங்க. I mean reception. Reception-னாலே Light Music இருக்கும். நான் இதுவரைக்கும் போன marriages-லலாம் light music பத்தி அவ்ளோ ஆராயிஞ்சதில்ல. ஏன்னா என் கூட அங்க என் சொந்தகாரங்க பசங்களும் வந்திருப்பாங்க ..so மாப்பள பொண்ணோட லட்சணம், சாப்பாடு எதிர் நோக்கி வந்தவங்க mind read பண்றது, நாங்க சும்மா கெடந்தாலும் note பண்ண வெக்கற மாதிரி எதாவுது தடா புடலா செய்றவங்கள பத்தி comment pass பண்றதுன்னு இருப்போம் . But இங்க என் சொந்தக்கார பசங்க ரொம்ப கம்மியாதான் வந்திருந்தாங்க. எல்லாருக்கும் ஏதோ ஆபீஸ் vela..illana மேல் படிப்பு commitments. நம்மள மாதிரி office-க்கும் போயிக்கிட்டு, அப்பரும் reception-உம் attend பண்ணிக்கிட்டு, அதுக்கப்பரும் இப்பிடி ஒரு blog-யும் எழுதிக்கிட்டோ..இல்ல உங்கள மாதிரி படிச்சிகிட்டு இருக்கற வெட்டி சுதந்திரம் நிறைய பேருக்கு கிடையாது. என்ன நான் சொல்றது...?

So Light music start ஆச்சு..இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்..light music troop-ல guitar வாசிப்பது என் சொந்த மாமா அவர்கள். சின்ன வயசில்லிருந்தே எங்க மாமா கிட்ட நான்............. செம்ம அடி வாங்கிருக்கேன்!!! அதோட நிறுத்தாம நான் வீட்ல பண்ற சேட்டைய என் primary school வரைக்கும் வந்து போட்டு குடுத்து, எச்சmiss..i mean H.M மிஸ் வரைக்கும் அடி வாங்க வெச்சிருக்காரு. Head Mistress கிட்ட அடி வாங்கற அளவுக்கு தப்பு பண்றதுன்னா சாதாரண விஷயமா?? - 'பெரும படரேண்டா கண்ணா' (விசு voice inside my head ) . எங்க H.M பத்தி சொல்லனும்னா, அவங்க பக்தியுள்ள christian. Daily school (The Washington English School) prayer அவங்கதான் front-ல நின்னு lead பண்ணுவாங்க. அவங்க 'வலிமையை தாரும்..வலிமையை தாரும்'-னு pray பண்ணும்போதுலாம், students-க்கு கன்னா-முன்னானு வயத்த பெறட்டும். ஏன்னா எல்லாருக்குமே 'இன்னிக்கு நாமதான் H.M miss கிட்ட அடிவாங்க போறோமோ'ன்னு ஒரு பயம்மிருக்கும். இதுல இவங்க வலிமை வேர கேட்டா, வயத்த பேறட்டாதா?

எங்க மாமா ரொம்ப வருஷமாவே guitar வாசிச்சிட்டிருக்கார். super-ஆ வாசிப்பார். Guitar வாசிப்பது ரொம்ப கஷ்டங்க. இப்படி இருக்கும்போது எங்க மாமா troop-ல இருந்தவங்கலாம் சரியான old-fashioned-ஆ இருந்தாங்க. முதல்பாடகர பாத்தபோதே இன்னிக்கு light music-ல M.S.V ராஜியம்தானு தோணிச்சு. But அவங்க அதுக்கும் ஒரு படி மேல போய் பாகவதர் பாட்டுலாம் பாடினாங்க. இதுல எங்க மாமா guitar வெச்சுட்டு என்ன பண்ணுவாருனு எனக்கும் கேள்வி வந்துச்சு. Light Music-a ஒரு வயசான தாத்தா மட்டும் light-ah தலையாட்டி ரசிச்சிகிட்டிருந்தார். 'This part of the program was sponsored by Gemini Hearing Machines' - எல்லாம் நம்ம விளம்பர பசங்கதான்..நீங்க continue பண்ணுங்க .

அது என்னமோ தெரியல நம்ம கண் பார்வைலிருந்து எவன் ஏமாத்த பாத்தாலும் correct-ah மாட்டிட்றான். Triple congo வாசிகரேன்னு ஒண்ணு overact பண்ணிட்டிருந்திச்சு. கணக்கு காமிக்க கூட்டிட்டு வந்த ஆள்னு நல்லா தெரிஞ்சிது. பின்ன?? சில நேரம் A.R.ரஹ்மான் பாட்டுலாம் kara-oke ல போட்டுட்டு சிவனேன்னு மத்த artist-லாம் உக்காந்திட்டு இருக்கும்போது, இவர் மட்டும் தலைய குனிஞ்சு தட்டிகிட்டிருப்பார். Drums-kaaran கட்டைய வெச்சு தட்டும்போதே, ' எங்கடா நம்ம instrument-ஓட sound, speaker-ல சரியா கேக்க மாட்டேங்குதே'-ன்னு feel பண்ரான். இவர் இங்க mike-உம் இல்லாம, ரெண்டு விரலால, இவருக்கு புடிச்ச pattern-ல தட்டிகிட்டிருந்தாறு. இதுல வேர சில நேரம், இவர் ஒரு beat மாத்தி தட்டினது, பாட்டோட ஜீவனையே பாதிச்சிட்டா மாதிரியும், அதை கல்யாணத்துக்கு வந்திரிந்தவங்க எல்லாரும் note பண்ணிட்டா மாதிரியும் feel பண்ணுவாரு.

ஹும்ம்..என்னமோ..

எல்லா பாட்டுமே மொக்கையா இருந்துச்சு. ஒரு வேளை light music troop-க்கு payment delay பண்ணிட்டதாலதான் இப்படியோன்னு doubt கூட வந்திச்சு. But, மண மக்கள் மேடைல ஏறின உடனே 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை'-னு பாட்டு பாடும்போதுதான், payment-eh தரலைன்னு confirm ஆச்சு.அதுக்கு இப்படியா மாப்ளையே வெறுப்பேத்துவாங்க?
So, Light music மக்களே..கஷ்ட பட்டு சம்பாதிக்கலாம்..but அது மத்தவங்க(audience) கஷ்டப்பட்டு கெடயாது. திருமண வீட்டாரே, நீங்களும் Light Music-குக்கோ, Caterers-கோ payment பாக்கி வெச்சுராதீங்க. இல்லனா வீட்டு தாய்மார்கள், அடம் புடிக்கற பசங்கள்ட "அழுகைய நிறுத்திட்டு school-கு போறியா? இல்ல evening எதாவது reception கூட்டிட்டு போகட்டுமான்னு " மெரட்டற காலம் வந்திடும்.

Wednesday, September 2, 2009

அது ஒரு அப்பாவி Jeevan - 2

நான் முன்னாடி சொன்ன மாதிரி , இந்த terrorism-மும் ,சமீப காலத்துல swine-flu-வும் நம்ம நாட்டு மக்கள ரொம்ப கஷ்ட படுத்துது.

முன்னலாம் terrorist infiltration நடக்காம இருக்க, airport-ல security checks நடக்கும். ஆனா இப்ப என்னனா swine-flu வந்தவங்க வராம இருக்க check பண்றாங்க. Face mask-லாம் குடுக்கறாங்க(ளாம்). இதனால market-ல lip sticks, Deodorant sales-லம் கம்மி ஆயிடிச்சு! . மக்கள் face mask-ஆல மூக்கையும், முகத்தையும் மூடிக்க ஆரமிச்தால, இந்த மாதிரி போருட்க்களோட அவசியம் ரொம்ப கம்மி ஆயிடிச்சு.
இந்த முகமூடி விஷயம் நம்ம internal security-kku ஒரு நல்ல செய்தி-னு சிலதுங்க ஒளருது. "இப்பலாம்.. professional terrorists, securities கிட்ட மாட்டாம இருக்க மக்களோட மக்களா, முகமூடி போடாம வராங்க. ஆனா நம்ம மக்கள் இப்போ முகமூடி போட்டுக்க ஆரமிச்சிருகாங்க. இதனால, terrorists-a easy-யா track பண்ணிட முடியும்"-னு சில பன்னாடைகள் ஐடியா குடுக்குது. But, நம்ம கைல ஒரு swine-flu-ல பாதிக்க பட்ட chief terrorist சிக்கறான் வெச்சுகோங்க, நம்ம அவனுக்கு தூக்கு தண்டன குடுக்காம, hospital-ல லட்சம் லட்சமா செலவழிச்சு swine-flu-வ குணப்படுத்துவோம். அதுக்கப்பரும் வாக்கு மூலம் வாங்குவோம். அவனும் நமக்கு தெரிஞ்ச விஷயத்தயேதான் சொல்லுவான். இப்பலாம் "இது trailer-தான், full movie இனிமேதான் release"-ன்னு punch dialogue-லாம் பேசறாங்க. இதக்கூட சில ஆளுங்க serious-ஆ note பண்ணிகறாங்க. அதுக்கும் மேல, நம்மாளுங்க விஷயம் புரியாம "நாங்க திருட்டு VCD-லதான் பாப்போம்"-ன்னு மொக்க போடறாங்க.

அது சரி, நம்ம jeevan marriage reception-க்கு போயிட்டிருக்கோம். Reception-க்கு தேவையான gift-டும் எடுத்துகிட்டுதான் கேளம்பிருக்கோம். இந்த மாதிரி விஷயங்களுக்குலாம் gift வாங்கவே ரொம்ப வாக்குவாதம் நடக்கும். இவங்கலாம் சேர்ந்து என்ன gift select பண்ணிருகாங்கன்னு தெரியல. Jeevan-க்கு office போயிட்டு வர வசதியா, நல்ல car வாங்கி தர சொல்லிதான் ரொக்க பணம் 150 rupees கொடுத்திருந்தேன். என்ன அப்படி பாக்றீங்க? இவங்க என்னனா ஏதோ சின்ன கவர்-ல gift போட்டு எடுத்திட்டு போறாங்க. அத பிரிச்சு பாத்தா jeevan சந்தோஷ படுவாரோ , நொந்து போவாரோ. ஆனால், இந்த gift, presents இதெல்லாம் எப்பவுமே ஒரு jolly-யான விஷயம்தான். OC-ல கிடைக்குதுன்னா சும்மாவா?

நீங்க தப்பா நேனைகலன்னா ஒரு விஷயம் சொல்லறேன்..

நம்ம பொறக்கும்போது எல்லாரும் innocent-டாதான் இருந்திருப்போம். ஏதோ ஒரு சமயத்துல நமக்குள்ள கேடித்தனம் அவதாரம் எடுத்திருக்கும். அதுக்கப்பரும் நம்ம கேடிங்கதான். No looking back!. சரி matter-க்கு வரேன்...இந்த மாதிரி கேடியான எனக்கு ஒரு சமயம் b'day வந்திச்சு. எங்கம்மா sweets செஞ்சு பக்கத்து வீட்டுகாரங்களுக்குலாம்போய் குடுக்க சொன்னாங்க. ஒவ்வொரு வீடா போய்..

பக்கத்து வீட்டு uncle: டேய்!! என்னடா supera வந்திருக்க?

நான்: எனக்கு happy B'day uncle..

uncle: அட..Many more happy returns of the day..

அப்பிடி சொல்லி sweet-a எடுத்துகிட்டு, கைல ஒரு 10 rupees note-a குடுப்பாங்க!!!

அட்ரா சக்க!!!

இந்த technique-a நல்ல புடிச்சிகிட்டு, every B'Day மறக்காம sweets செஞ்சு, நம்மளால எவ்ளோ வீட்ட visit அடிக்க முடியுமோ அவ்ளோ visit அடிக்க வேண்டியது. But, இதே technique follow பண்ணி எதாவது சின்ன பையன் எங்க வீட்டுக்கு B'Day-nu sweets எடுத்துகிட்டு வந்தான்னா, அழ அழ கலாய்ச்சு வீட்டுக்கு அனுப்பிடவேண்டியது . இப்பலாம் மக்கள் ரொம்ப உஷார்! B'Day கொண்டாடுரவனுக்கு gift கிடைக்குதோ இல்லையோ, அவன வெச்சு treat வாங்கி நாமம் போட்டு அனுப்ச்சிடறாங்க.

But, கேவலம் OC-ல வர gift-காகவா Jeevan கல்யாணம் செஞ்சிட்டிருப்பார்? சீ..சீ..

Btw, reception super-a இருந்துச்சு..நான் நெனச்சபடி சாப்பாடும், நிறைய items-oda colourful-லா இருந்துச்சு.